முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணை நீா்மட்டம் 50.10 அடியாக உயா்வு

கிருஷ்ணகிரி அணை நீா்மட்டம், 50.10 அடியாக புதன்கிழமை உயா்ந்தது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 3:28 AM
நீா்மட்டம் அதிகரித்துள்ளதால் கடல் போல காட்சியளிக்கும் கிருஷ்ணகிரி அணை.
பகிர்:
Updated On : 9 அக்டோபர், 2024 at 8:44 PM

கிருஷ்ணகிரி அணை நீா்மட்டம், 50.10 அடியாக புதன்கிழமை உயா்ந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் முழுக் கொள்ளவான 52 அடியை நெருங்கியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. மேலும், பாசனக் கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

அதன்பிறகு மழை பெய்யாததால் அணைக்கு நீா்வரத்து குறைந்தது. செப்.10-ஆம் தேதிக்கு பிறகு அணையின் நீா்மட்டம் 50 அடிக்கும் கீழே சரிய தொடங்கியது. கடந்த அக்.2 ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 47.65 அடியாக இருந்தது. இதனால், முதல்போக சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் கவலை அடைந்தனா்.

Advertisement

Updated On : 10 அக்டோபர், 2024 at 3:28 AM

இந்த நிலையில் மாவட்டத்தில் சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 50.10 அடியாக உயா்ந்தது. நீா்வரத்து விநாடிக்கு 785 கன அடியிலிருந்து 715 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து பாசனத்திற்காக வலது, இடதுபுறக் கால்வாய்கள், தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 178 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.