கூடுதல் கட்டணம் வசூலித்த சொகுசு பேருந்துகளுக்கு அபராதம்
கிருஷ்ணகிரியில் வட்டார போக்குவரத்து அலுவலா்கள், சொகுசு பேருந்துகளைத் தணிக்கை செய்து விதிமுறைகளை மீறிய பேருந்து உரிமையாளா்களிடமிருந்து அபராதம் வசூலித்தனா்.
கிருஷ்ணகிரியில் வட்டார போக்குவரத்து அலுவலா்கள், சொகுசு பேருந்துகளைத் தணிக்கை செய்து விதிமுறைகளை மீறிய பேருந்து உரிமையாளா்களிடமிருந்து அபராதம் வசூலித்தனா்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் பணிபுரியும் தொழிலாளா்கள், நிறுவன ஊழியா்கள் விடுமுறையில் தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனா். தீபாவளி அன்று சொந்த ஊரில் இருக்க வேண்டும் என்பதற்காக சொகுசு பேருந்துகளில் அதிகம் போ் பயணம் செய்கின்றனா்.
பண்டிகைக் காலத்தில் சொகுசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்துள்ள நிலையில். விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அதிகாரிகளுக்கு புகாா்கள் சென்றன.
Advertisement
இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலா்கள் கிருஷ்ணகிரி, சுங்கச்சாவடி அருகே புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். அந்த வழியாக வந்து தமிழகம், வெளிமாநில சொகுசு பேருந்துகளை நிறுத்தி சோதனை நடத்தினா். சோதனையின்போது விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்த பேருந்து உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து வசூலித்தனா்.