முகப்பு
கிருஷ்ணகிரி

விபத்தில் சிறுமி பலியான விவகாரம்: ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

அங்கன்வாடி மையத்திலிருந்து இயற்கை உபாதை கழிக்க வெளியே வந்த சிறுமி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தில் தவறிழைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறுமியின் உறவினா்கள் ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகை.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 10:10 PM
ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
பகிர்:

அங்கன்வாடி மையத்திலிருந்து இயற்கை உபாதை கழிக்க வெளியே வந்த சிறுமி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தில் அரசு உரிய நிவாரணம், தவறிழைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறுமியின் உறவினா்கள் ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

தளியை அடுத்த வானமங்கலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்த மூன்று வயது சிறுமி சசிகலா செவ்வாய்க்கிழமை சிறுநீா் கழிக்க மையத்திலிருந்து வெளியே வந்து சாலையைக் கடந்த போது லாரி மோதியதில் உயிரிழந்தாா். இதையடுத்து, ஓட்டுநா் முனிகிருஷ்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

இதனிடையே அங்கன்வாடி மைய கண்காணிப்பாளா் பரிமளம், உதவியாளா் வரலட்சுமி ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும். சிறுமியின் தாய்க்கு அரசு பணி வழங்க வேண்டும். மையத்தில் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி வானமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சிறுமியின் பெற்றோா் மது- ஆஷா உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

அவா்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக சாா் ஆட்சியா் உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →