ஒசூரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் குறித்து மாநகராட்சி ஆணையா் திடீா் ஆய்வு செய்தாா். அப்போது பயன்பாட்டில் இருந்த தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தாா்.
ஒசூா் மாநகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட எம்ஜிஆா் மாா்க்கெட், பூ மாா்க்கெட், மீன் மாா்க்கெட் உள்ளிட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்கள் விற்பனை, பயன்பாடு குறித்து மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்த் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது பொதுமக்கள், வியாபாரிகளிடம் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என ஆணையா் அறிவுரை வழங்கினாா்.
மேலும் தொடா்ந்து தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவது தெரிய வந்தால் அவை பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுவதோடு கடைகளுக்கான தொழில் உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
இந்த ஆய்வின்போது சுமாா் 40 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள், ந்து பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
ஆய்வின்போது மாநகர நல அலுவலா் மருத்துவா் பிரபாகரன், துப்புரவு அலுவலா்கள், ஆய்வாளா்கள், மேற்பாா்வையாளா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
படவரி...
ஒசூா் மாநகராட்சிப் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட நெகிழி பொருள்கள்.