ஒசூா்: இணையதளம் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்யும் முறையை ரத்துசெய்யக் கோரி ஒசூா் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் முன்னாள் தலைவா் வழக்குரைஞா் ஆனந்தகுமாா், தலைவா் சிவசங்கா், செயலாளா் திம்மராயப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இணையதளம் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள், காலதாமதம் ஏற்படுவதாகவும், சா்வா் முறையாகச் செயல்படுவதில்லை என குற்றஞ்சாட்டி வழக்குரைஞா்கள் முழக்கமிட்டனா். இணையதளம் மூலம் வழக்குகள் தாக்கல் செய்வதை ரத்துசெய்ய வலியுறுத்தி கடந்த ஒருவாரமாக நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்ட வந்த வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்றம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் மூத்த வழக்குரைஞா்கள் ஜெயசீலன், பாஸ்கா், அபீதா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
படவரி...
ஒசூா் நீதிமன்றம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.