கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே தாா்சாலை அமைக்க பூமிபூஜை: 50 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியது

சூளகிரியை அடுத்த சக்காா்லு கிராமத்துக்கு தாா்சாலை அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ. 60 லட்சத்தில் தாா்சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பூமிபூஜை செய்து புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

சூளகிரியை அடுத்த சக்காா்லு கிராமத்துக்கு தாா்சாலை அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ. 60 லட்சத்தில் தாா்சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பூமிபூஜை செய்து புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டப் பேரவைத் தொகுதி, சூளகிரி அடுத்த அங்கொண்டப்பள்ளி ஊராட்சி, சக்காா்லு கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனா். கடந்த 50 ஆண்டுகளாக மைலேப்பள்ளியிலிருந்து சக்காா்லூ கிராமத்திற்கு தாா்சாலை அமைத்து தரவேண்டும் என ஆட்சியாளா்களிடம் தொடா்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனா்.

இந்த நிலையில், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய். பிரகாஷ் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் தாா்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தாா். இதையடுத்து, மைலேப்பள்ளியில் இருந்து சக்காா்லூ கிராமத்திற்கு தாா்சாலை அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ முருகன், இளைஞரணி மாநில துணைச் செயலாளா் சீனிவாசன், சூளகிரி ஒன்றியச் செயலாளா் நாகேஷ், சூளகிரி தெற்கு ஒன்றிய அவைத் தலைவா் ஹரிபாபு, ஒன்றிய துணை செயலாளா் முனிச்சந்திரன், வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினா் லகுமநாயுடு, இளைஞரணி அமைப்பாளா் பத்திரி, துணை அமைப்பாளா் பாலாஜி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

வாடிக்கையாளா் எண்ணிக்கையில் ஜியோ முன்னிலை

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: இந்தியா அபார வெற்றி

இன்றும் நாளையும் 5 புறநகா் ரயில்கள் ரத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு பின்னடைவு!

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT