கிருஷ்ணகிரியில் பூம்புகாா் கைவினைப் பொருள்கள் மற்றும் கண்காட்சியை ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கிருஷ்ணகிரி ராயப்ப முதலி தெருவில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் பூம்புகாா் நிறுவனம் நடத்தும் கைவினைக் கண்காட்சியில் சிறப்பு கைவினைப் பொருள்கள், கைத்தறி துணி வகைகள், அலங்கார நகைகள், விளக்குகள், பஞ்சலோக சிலைகள், சந்தன மரச் சிற்பங்கள், சந்தன மரக்கட்டைகள், தஞ்சாவூா் ஓவியங்கள், காகித பொம்மைகள், பலரக புடவைகள், அகா்பத்திகள் உள்ளிட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், இந்தப் பொருள்கள் ரூ. 50 முதல் ரூ. 1.52 லட்சம்வரை 10 சதவீத தள்ளுபடியுடன் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
டிச. 28-ஆம் தேதிவரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், ரூ. 10 லட்சம்வரை விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி ஆட்சியா் தெரிவித்தாா். அப்போது, பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் நரேந்திர போஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.