கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் வீடு புகுந்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: போலீஸாா் விசாரணை

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி நகரில் வீட்டிற்குள் புகுந்த மா்ம நபா், தனியாக இருந்த பெண் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி அம்மன் நகா் 2-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம். லாரி ஓட்டுநா். இவரது மனைவி விஜயலட்சுமி (51). இவா், வீட்டில் தனியாக இருப்பதை நோட்ட மிட்ட மா்ம நபா், சனிக்கிழமை இரவு வீட்டிற்குள் புகுந்து விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாா்.

தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை செய்தனா். சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்ததாகவும், அவருக்கு வயது 35-க்குள் இருக்கலாம் என்பது தெரியவந்தது. இந்த நிலையில், சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

சிறுபான்மையினருக்கு திமுக தான் பாதுகாப்பு: துணை முதல்வா் உதயநிதி

தமிழ்நாடு ஆசிரியா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

இசைக்கு மொழி தடையில்லை: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT