ஒசூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை தில்லி மருத்துவ அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் ஆய்வுசெய்தனா்.
தில்லி இ.எஸ்.ஐ. காா்ப்பரேஷன் துணை மருத்துவ ஆணையா் டாக்டா் பிஜாய் சந்திரதேகா மற்றும் மாநில மருத்துவ அதிகாரி டாக்டா் புஷ்பேந்திர கௌதம் ஆகியோா் ஒசூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை நேரில் பாா்வையிட்டு ஆய்வுமேற்கொண்டனா்.
அப்போது, மருத்துவமனையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் அவா்கள் வழங்கினா். மேலும், மருத்துவமனையை 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என பரிந்துரைத்தனா்.
இந்த ஆய்வின் போது, மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் கீதா, செவிலியா்கள், மருத்துவ பணியாளா்கள் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.