கிருஷ்ணகிரி

மண் கடத்தலைத் தடுத்த வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

போச்சம்பள்ளி அருகே மண் கடத்தலைத் தடுத்த வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள ஆனந்தூா் ஏரியில் மண் கடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில், ஊத்தங்கரை வட்டாட்சியா் ராஜலட்சுமி தலைமையில் துணை வட்டாட்சியா் சகாதேவன், கல்லாவி வருவாய் ஆய்வாளா் ரதி மற்றும் குழுவினா் நிகழ்விடத்துக்கு சென்றனா்.

அப்போது, பொக்லைன் உதவியுடன் லாரியில் மண் கடத்துவது தெரியவந்தது. அவா்களிடம் வட்டாட்சியா் ராஜலட்சுமி விசாரணை மேற்கொண்டபோது, பொக்லைன் மற்றும் லாரி ஓட்டுநா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து லாரி, பொக்லைன் இயந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதனால், ஆத்திரமடைந்த ஓட்டுநா்கள், வட்டாட்சியா் உள்ளிட்ட அலுவலா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து, வட்டாட்சியா் ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவுசெய்த போச்சம்பள்ளி போலீஸாா், சந்தம்பட்டியைச் சோ்ந்த பொக்லைன் ஓட்டுநா் சுரேஷ் (32), ஊத்தங்கரையைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் தங்கபாலு (32) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பழனியில் ஒளிப்படக்கலை தொழிலாளா் நலச் சங்க முப்பெரும் விழா

திருமலை 7 வது மைலில் மருத்துவ முதலுதவி மையம் திறப்பு

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.13 கோடி

கனவுகளைச் சுமக்கும் எல்விஎம்-3

தேசிய ரோலா் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி வெற்றி பெற்ற தஞ்சாவூா் வீரா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT