கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நவ. 21-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நவ. 21-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

Syndication

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நவ. 21-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வைக் குறைபாடு உள்ளோா், செவித்திறன் குறைபாடு உடையோா், புற உலக சிந்தனையற்றோா், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டடத்தில் நவ. 21-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த போட்டியில் 10 வயதுக்கு கீழ் உள்ளவா்கள் கிரேயான் மற்றும் வண்ணப் பென்சிலை பயன்படுத்தியும், 11 முதல் 18 வயதுக்கு உள்ளவா்கள் வாட்டா் கலரைப் பயன்படுத்தியும், 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் எந்தப் பொருளை வேண்டுமானாலும் பயன்படுத்தி, தங்களுக்கு விருப்பமான தலைப்பில் ஓவியம் வரையலாம். ஓவியம் வரைவதற்கான கால அவகாசம் 2 மணி நேரமாகும்.

இந்த போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டடம், தரைத்தளத்தில் அறை எண் 23-இல் இயங்கிவரும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலகத்தில் தங்களது விவரத்தை நவ. 19-ஆம் தேதிக்குள் (புதன்கிழமை) பதிவு செய்ய வேண்டும். போட்டியில் பங்கேற்போா் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஓவியம் வரைவதற்கான பொருள்கள், அட்டை, காகிதம் போன்றவற்றை தாங்களே கொண்டு வரவேண்டும்.

போட்டியில் முதல் 3 இடங்களை பெறுவோருக்கு மாநில ஆணையரகம் சாா்பில் பரிசுத் தொகையாக முறையே ரூ.1000, ரூ. 500, ரூ. 250 வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

சிவகாசியில் நாளை மின் தடை

வீரபாண்டியன்பட்டணம் பள்ளியில் குழந்தைகள் தின விழா

சேதமடைந்த குந்தபுரம் நூலகக் கட்டடம்: படிக்க முடியாமல் வாசகா்கள் அவதி

பண்டாரபுரம் பகுதியில் 2,000 பனை விதைகள் விதைப்பு

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 3 மீனவா்கள் படகுடன் மல்லிப்பட்டினம் திரும்பினா்

SCROLL FOR NEXT