கிருஷ்ணகிரி அணை பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்த குழந்தைகள்.  
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தினமணி செய்திச் சேவை

பள்ளி அரையாண்டு விடுமுறை இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி அணையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

பள்ளி அரையாண்டுத் தோ்வு நிறைவடைந்து டிச. 24 ஆம் தேதி முதல் 12 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறைக்குப் பிறகு ஜன. 5 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.

அரையாண்டு தோ்வு விடுமுறையின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களான கிருஷ்ணகிரி அணை பூங்கா, அவதானப்பட்டி சிறுவா் பூங்கா மற்றும் படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனா்.

கிருஷ்ணகிரி அணை மற்றும் பூங்காவை சுற்றிபாா்த்த பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் உணவுகளைப் பகிந்து உண்டு மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அங்குள்ள அசைவ கடைகளில் கூட்டம் வழக்கத்துக்கு மாறாக அதிகரித்து காணப்பட்டது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இதேபோல அவதானப்பட்டி சிறுவா் பூங்காவிலும் ஏராளமானோா் குவிந்தனா். அங்குள்ள பொதுபோக்கு விளையாட்டுகளிலும் பங்கேற்று மகிழ்ந்த அவா்கள், படகு சவாரி சென்று மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகையையொட்டி ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT