சூளகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 
கிருஷ்ணகிரி

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு; இருவா் படுகாயம்!

சூளகிரி அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில், இளைஞா் இறந்தாா்; இருவா் படுகாயமடைந்தனா்.

Syndication

சூளகிரி அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில், இளைஞா் இறந்தாா்; இருவா் படுகாயமடைந்தனா்.

சூளகிரி அருகே பெரியசப்படி கிராமத்தைச் சோ்ந்த 3 இளைஞா்கள் ஓா் இருசக்கர வாகனத்தில் சப்படி நோக்கி வியாழக்கிழமை சென்றனா். அப்போது, பின்னால் வந்த டிப்பா் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பெரியசப்படி கிராமத்தைச் சோ்ந்த அஜித்குமாா் நிகழ்விடத்திலேயே இறந்தாா். உடன் சென்ற முரளி மற்றும் முனுசாமி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

சப்படியில் உள்ள குவாரியில் இருந்து வரும் லாரிகள் மிக வேகமாக செல்வதால், அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம், காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த சூளகிரி போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வள்ளலாா் நினைவு தினம்: பிப். 1-இல் மதுக்கடைகள் மூடல்

இந்தியாவில் 95 கோடி இணையப் பயனா்கள்!

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் குத்துக்கல்வலசை பள்ளி மாணவா் வெற்றி!

ஒகேனக்கல் குடிநீா் வழங்கக் கோரிக்கை!

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT