நாமக்கல்

ஜேஇஇ நுழைவுத் தேர்வு: நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை

தினமணி

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியின் 5 மாணவர்கள் ஜேஇஇ ஒருங்கிணைந்த பிரதான தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
 ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி, ஐஐஎஸ்டி ஆகிய மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படுகிறது. முதலில் ஜேஇஇ பிரதான தேர்வும், பின்னர் ஜேஇஇ முதன்மைத் தேர்வும் நடத்தப்படும். ஜேஇஇ பிரதானத் தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்துகிறது.
 நிகழாண்டு நடைபெற்ற இத்தேர்வில் சுமார் 12 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
 அதில் தரவரிசையில் முதல் 2 லட்சத்தில் இடம் பெற்ற மாணவர்கள் ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
 இதில் நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் விக்னேஸ்வரன், ராம்கிஷோர், சேதுராஜன், அஜய் சங்கர், ரெஜி அர்னால்டு ஞானம் ஆகியோர் ஜேஇஇ முதன்மை தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
 இதில் மாணவர்கள் விக்னேஸ்வரன், ராம்கிஷோர் தரவரிசைப் பட்டியலில் 4,051 மற்றும் 12,105-ஆவது இடத்தைப் பிடித்தனர். மாணவர்களைப் பள்ளித் தலைவர் சரவணன், மற்றும் பள்ளி முதல்வர்கள் ஆகியோர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT