இந்து முன்னணி பொதுக்கூட்டம்
பரமத்தி வேலூர் அருகே பொத்தனூரில் இந்து முன்னணி சார்பில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
நாமக்கல்இந்து முன்னணி பொதுக்கூட்டம்
பரமத்தி வேலூர் அருகே பொத்தனூரில் இந்து முன்னணி சார்பில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
பரமத்தி வேலூர் அருகே பொத்தனூரில் இந்து முன்னணி சார்பில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
பொத்தனூர் பள்ளி சாலையில் நடைபெற்ற கூட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட பொதுச் செயலர் கோபிநாத் தலைமை வகித்தார். பொத்தனூர் நகர பொதுச் செயலர் மணிராஜ் வரவேற்றார். நாமக்கல் மாவட்டப் பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலர் சரவணன், கபிலர்மலை ஒன்றியச் செயலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கோவை மாவட்ட இந்து முன்னணி பொறுப்பாளர் கிருஷ்ணன், கரூர் மாவட்டத் தலைவர் கனகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஜனவரி 1-ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாடக் கூடாது என கூறினர். இதில் இந்து முன்னணி மாவட்ட மற்றும் கபிலர்மலை ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். கபிலர்மலை ஒன்றியச் செயலர் ராஜலிங்கம் நன்றி கூறினார்.