டிச.31-இல் மோகனூர் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
மோகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் வரும் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மோகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் வரும் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மோகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1982-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு மற்றும் 1985- ஆம் ஆண்டு பிளஸ் 2 பயின்ற மாணவர்கள் சார்பில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா, பள்ளி நுழைவு வாயில் திறப்பு விழா மற்றும் முன்னாள் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா வரும் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது.
முன்னாள் மாணவரும், நாமக்கல் கிரீன் பார்க் கல்வி நிறுவனத்தின் இயக்குநருமான எஸ்.குருவாயூரப்பன் தலைமைமையில் நடைபெற உள்ள இந்த விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.உஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
விழாவில் அரசுப் பள்ளியில் ரூ.4 லட்சத்தில் கட்டப்பட்ட முகப்புக் கட்டடம், தேசத் தலைவர்கள் உருவப் படம், நுழைவு வாயில் மற்றும் மணிக்கூண்டு திறப்பு விழா மற்றும் நூலகத்துக்கு புத்தகங்கள், பீரோ வழங்கப்பட உள்ளன. மேலும், கற்பித்த ஆசிரியர்களுக்கு சிறப்புப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.