நாமக்கல்

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் அறிவுத்திறன் தேர்வு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் பொறியியல்,

தினமணி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் பொறியியல், கலை அறிவியல் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரிகளில் இலவச கல்வி மற்றும் கட்டணச் சலுகை வழங்கப்பட உள்ளது.
 விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் செயலர் பேராசிரியர் மு. கருணாநிதி கூறியதாவது: திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனம் பெண்களுக்கென பார்மஸி, நர்சிங், பல் மருத்துவம், கலை அறிவியல், பொறியியல், கல்வியியல் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி என பல கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
 பிளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையால் மாணவிகள் தங்கள் உயர் கல்வியை தொடர முடியாமல் நின்று விடுபவர்களுக்கு உதவும் அடிப்படையில், ஒவ்வொரு வருடமும் விவேகானந்தா அறிவுத்திறன் தேர்வு மூலம் ரூ.3 கோடி மதிப்பில் மாணவிகளுக்கு பொறியியல், கலை அறிவியல் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரிகளில் இலவசக் கல்வி மற்றும் கட்டணச் சலுகை கடந்த 7 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
 இந்த கல்வியாண்டும் (2017-18) இலவசக் கல்வி மற்றும் கட்டணச் சலுகைக்கான விவேகானந்தா அறிவுத்திறன் தேர்வு- 2017 நடைபெற உள்ளது.
 அத் தேர்வானது மாநிலம் முழுவதும் உள்ள பிளஸ் 2 மாணவிகளுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவன வளாகத்தில் காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது. இத் தேர்வை பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவிகளும் எழுதலாம். இத் தகுதித் தேர்வில் இடம்பெறும் கேள்விகள் அனைத்தும் பிளஸ் 2 வகுப்பில் மாணவிகள் தாங்கள் படித்த பாடப் பகுதிகளில் இருந்து மட்டுமே சரியான விடையை தேர்வு செய்யும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.
 விவேகானந்தா அறிவுத்திறன் தேர்வு-2017-ல் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் குடும்பப் பொருளாதாரச் சூழ்நிலை அடிப்படையில் இலவசக் கல்வி மற்றும் கட்டணச் சலுகைக்கு மாணவிகள் தேர்வு செய்யப்படுவர். தகுதி பெறும் மாணவிகளுக்கு கல்லூரியில் படிப்பு காலம் முடியும் வரை இலவசக் கல்வி மற்றும் கட்டணச் சலுகை வழங்கப்படும். இந்த தேர்வு எழுதும் அனைத்து மாணவிகளுக்கும் கல்வி கட்டணச் சலுகை வழங்கப்பட உள்ளது.
 அறிவுத் திறன் தேர்வில் பங்குபெற விரும்பும் மாணவிகள் இதுவரை தங்கள் பெயரை பதிவு செய்யாமல் இருந்தால், தேர்வு நடைபெறும் 02.04.17 அன்று காலை 9 மணிக்குள் நேரில் பதிவு செய்து கொண்டு தேர்வு எழுதலாம்.
 நாமக்கல், மோகனூர், பேளுக்குறிச்சி, சேந்தமங்கலம், புதன்சந்தை, புதுச்சத்திரம், முசிறி, தொட்டியம், ராசிபுரம், ஆத்தூர், நாமகிரிபேட்டை, மல்லியக்கரை, தம்மம்பட்டி, மங்களாபுரம், ஆயில்பட்டி, சேலம், மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி, காக்காபாளையம், இளம்பிள்ளை, புதிய பஸ் நிலையம், ஜங்ஷன், மல்லூர், நெத்திமேடு, குகை, சேலம் பழைய பஸ்நிலையம், அஸ்தம்பட்டி, மணக்காடு, கண்ணங்குறிச்சி, வாழப்பாடி, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, அயோத்தியாபட்டணம், பெத்தநாய்க்கன்பாளையம், சங்ககிரி, குமாராபாளையம், எடப்பாடி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, மேச்சேரி, மேட்டூர், அம்மாபேட்டை, கொளத்தூர், பவானி, அந்தியூர், ஆப்பக்கூடல், ஈரோடு, பள்ளிபாளையம், திருப்பூர் பழைய பஸ் நிலையம், பெருந்துறை, நம்பியூர், கோபி, சித்தோடு, கவுந்தப்பாடி, கரூர், வேலூர், சித்தாளந்தூர், பரமத்தி, பாண்டமங்கலம், சோழசிராமணி, ஜேடர்பாளையம், கொக்கராயன்பேட்டை, இறையமங்கலம், திருச்செங்கோடு. தேர்வு நாள் அன்று மேற்கண்ட ஊர்களின் பேருந்து நிலையம் அருகில் இருந்து பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் கல்லூரிக்கு வந்து செல்ல காலை 7.30 மணிக்கு இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
 ஏப்ரல் 9ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை சங்ககிரி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விவேகானந்தா அறிவுத்திறன் தேர்வு 2017 நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT