முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம்

ராசிபுரம் ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம் பிள்ளாநல்லூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

ராசிபுரம் ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம் பிள்ளாநல்லூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஒன்றிய பொதுச் செயலர் எஸ்.கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். லட்சுமணன் வரவேற்றார். பாஜக மூத்தோர் அணி மாநில  பொருளர் என்.வி.நாகேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் சித்ரா, பிரபுநாகேந்திரன், பி.ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாநகர் மாவட்டச் செயலர் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துக்கு அரசாணை வெளியிட்ட பிரதமருக்கு செயற்குழுவில் பாராட்டு தெரிவிப்பது. ஒன்றியப் பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் மேல்மூடி இல்லாமல் உள்ளது. இதனை பாதுகாப்பாக மூடிவைக்க வேண்டும். ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் திறந்தவெளியில் மலம் கழிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொன்குறிச்சி முதல் பழைய ஆர்டிஒ அலுவலகம் வரை உள்ள சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →