நாமக்கல்

அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான கலந்துரையாடல்

DIN

கொல்லிமலை வட்டராம், இலக்கியம்பட்டி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் துறை சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.  
நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் செளந்தரராஜன் தலைமை வகித்தார். கருத்தரங்கில் அவர் பேசுகையில், அட்மா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை எடுத்துரைத்தார்.  மேலும் கொல்லிமலை வட்டாரத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கான நவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து அதிக மகசூல் எடுத்திட கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து பேசிய வேளாண்மை அலுவலர் கெளதமன், இயற்கை வேளாண்மை சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக் கூட்டுதலுக்கான தொழில்நுட்ப செய்திகளை விரிவாக எடுத்துரைத்தார். கலந்துரையாடலில் கலந்து கொண்ட நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் சங்கர் பேசுகையில்,  நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது மற்றும் தேவையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிகக் குறைந்த முதலீட்டில் மகசூல் பெறுவதற்கான தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தார். நிகழ்வில் நெல், ராகி, வாழை, மிளகு சாகுபடி விவசாயிகள் கேள்விகளுக்கு பதில் வழங்கியதுடன், செயல் விளக்கங்களை செய்து காண்பித்தார்.  
கலந்துரையாடலில் அந்தப் பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்டத் தொழில்நுட்ப மேலாளர், உதவித் தொழில்நுட்ப மேலாளர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT