நாமக்கல்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: 43 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

DIN

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 43 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.23,200 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் முதியோர், விதவை, கல்வி உதவித் தொகை , இலவச வீட்டு மனைப் பட்டா, குடிசை மாற்று வாரியத்தில் வீடு,  குடிநீர்,  சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 402 மனுக்கள் வரப்பெற்றன.  இந்த மனுக்களை உரிய அலுவலர்களிடம் வழங்கிய ஆட்சியர்,  அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
கூட்டத்தில் 43 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.23,200 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
 மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் நா.பாலச்சந்திரன், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ்.முரளிகிருஷ்ணன், கலால் உதவி ஆணையர் எம்.இலாஹிஜான், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் க.சுப்ரமணி உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT