நாமக்கல்

இலங்கை அகதிகள் முகாமில் டெங்கு தடுப்பு முகாம்

தினமணி

பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி இலங்கை அகதிகள் முகாமில், டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் மற்றும் நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ரமேஷ்குமார் உத்தரவின் படி, பரமத்தி வேலூர் வட்டாட்சியர் ருக்குமணி தலைமையில் நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் கெüரி, மருத்துவர்கள் பரணிதரன், சிவகாமி உள்ளிட்ட மருத்துவர்கள் பரமத்தி இலங்கை அகதிகள் முகாமில் புதன்கிழமை நோய்த் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பரமத்தி பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர் தலைமையில் துப்புரவுப் பணியாளர்கள் இலங்கை அகதிகள் முகாம் பகுதியில் புகை மருந்து அடித்தும், குப்பைகளை அகற்றியும், வீடுகள் தோறும் அபேட் மருந்து ஊற்றியும் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். முகாமுக்கான ஏற்பாடுகளை நல்லூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன், ஆய்வாளர் அப்துல்ரெஜின் ஆகியோர் செய்திருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT