நாமக்கல்

கொல்லிமலையில் பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

தினமணி

கொல்லிமலை நம்அருவி அருகே பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
 கொல்லிமலை வளப்பூர் நாடு மேல்செங்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (36), தொழிலாளி. இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் செவ்வாய்க்கிழமை இரவு அங்குள்ள நம்அருவி அருகில் உள்ள தடுப்புச் சுவரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாராம்.
 அப்போது திடீரென மழை பெய்யவே, மழையில் நனையாமல் இருக்க அனைவரும் எழுந்து ஓடினராம். இதில் சந்திரசேகரன் ஓடும் போது தவறி அருகில் இருந்த சுமார் 12 அடி பள்ளத்தில் விழுந்தாராம். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கொல்லிமலை வாழவந்திநாடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT