முகப்பு
நாமக்கல்

குமாரபாளையம் கோயில்களில் சித்ரா பெளர்ணமி வழிபாடு

குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் சித்திரை மாத பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு  வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் சித்திரை மாத பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு  வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 
குமாரபாளையம் சேலம் சாலை செளடேஸ்வரியம்மன் கோயில், ராஜ வீதி சவுண்டம்மன் கோயில்களில் ஸ்ரீராமலிங்கேஸ்வரர் மற்றும் ஸ்ரீராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது, சிறுமியர் சிவன் வேடமிட்டு சுவாமிகளின் அருகே அமரவைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. 
மேலும், உடையார் பேட்டை ராஜகணபதி கோவிலில் சிவன், பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.  இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.  இதுபோன்று, அனைத்துக் கோயில்களிலும் சித்ரா பெளர்ணமி சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடத்தப்பட்டன. 
 
முழு கட்டுரையைப் படிக்க →