நாமக்கல்

நாமக்கல் காமராஜர் மெட்ரிக் பள்ளி 100 சத தேர்ச்சி

DIN

நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளது.
இப் பள்ளி மாணவி ஒருவர் 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மற்றொரு மாணவி 490 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், ஒரு மாணவி, ஒரு மாணவர் 487 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.
அறிவியல் பாடத்தில் 5 பேரும், சமூக அறிவியலில் 2 பேரும், கணிதத்தில் ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 293 மாணவர்களில் 490 மதிப்பெண்களுக்கு மேல் 2 பேரும், 485-க்கு மேல் 9 பேரும், 480-க்கு மேல் 23 பேரும், 450-க்கு மேல் 95 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளித் தலைவர் ஆர்.நல்லதம்பி, செயலர் சதாசிவம் மற்றும் இயக்குநர்கள் பாராட்டினர்.
சமூக அறிவியலில் 463 பேர் சென்டம்
நாமக்கல், மே 23: நாமக்கல் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் 463 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாயின. இந்தத் தேர்வை நாமக்கல் மாவட்டத்தில் 308 பள்ளிகளைச் சேர்ந்த 22,245 மாணவ, மாணவியர் எழுதியிருந்தனர். இதில் 21,150 பேர் தேர்ச்சி பெற்றனர்.
அவர்களில் கணிதப் பாடத்தில் 9 பேர், அறிவியல் பாடத்தில் 64 பேர், சமூக அறிவியல் பாடத்தில் 463 பேர் 100-க்கு 100 மதிப்பெண்ணும் பெற்று சாதனை படைத்தனர். தமிழ் பாடத்தில் 104 பேர், ஆங்கிலப் பாடத்தில் 23 பேர் 99 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அறிவியல் பாடத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேர், சமூக அறிவியல் பாடத்தில் 28 பேர் என மொத்தம் 30 பேர் மட்டுமே 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT