முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோட்டில் சமுதாய நல்லிணக்க அணிவகுப்பு ஊர்வலம்

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு நடத்தியதின் 125-ஆம் ஆண்டை முன்னிட்டு சமுதாய நல்லிணக்க அணிவகுப்பு

Updated On : 22 அக்டோபர், 2018 at 8:03 AM
பகிர்:

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு நடத்தியதின் 125-ஆம் ஆண்டை முன்னிட்டு சமுதாய நல்லிணக்க அணிவகுப்பு ஊர்வலம் திருச்செங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு கோட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தை வழக்குரைஞர் ராஜசேகர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
ஊர்வலம் கோழிக்கால் நத்தம் சாலையிலிருந்து துவங்கி ரதவீதி வழியாக சி.எச்.பி. காலனியில் அமைந்துள்ள மகாதேவ வித்யாலயம் பள்ளி மைதானத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சீருடை அணிந்து பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 94-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 
வித்யாவிகாஸ் கல்வி நிறுவன தாளாளர் சிங்காரவேலு தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி இராம. ராஜசேகர் பேசினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.