முகப்பு
நாமக்கல்

வேளாண் மாணவர்களுக்கான கிராம தங்கல் திட்ட பயிற்சி

வேட்டாம்பாடி பி.ஜி.பி. வேளாண்மை அறிவியல் கல்லூரியில் பயிலும் இளநிலை வேளாண் மாணவர்களுக்குக் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் நாமகிரிப்பேட்டை வேளாண்மைத் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 9:22 AM
பகிர்:

வேட்டாம்பாடி பி.ஜி.பி. வேளாண்மை அறிவியல் கல்லூரியில் பயிலும் இளநிலை வேளாண் மாணவர்களுக்குக் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் நாமகிரிப்பேட்டை வேளாண்மைத் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.
 இறுதி ஆண்டு மாணவர்களின் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிராம தங்கல் திட்டத்தின் கீழ் 8 மாணவர்கள் ஆகஸ்ட் 21 முதல் நாமகிரிப்பேட்டை வட்டாரத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வேளாண் சார்ந்த பயிற்சி பெற்றனர். நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) பெ. மோகன் வழிகாட்டுதலில் இந்தப் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
 கிராம தங்கல் திட்டப் பயிற்சியின் ஒரு பகுதியாக நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் பாரதப் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கார்கூடல்பட்டி கிராமத்தில் நடைபெற்ற பயிர் அறுவடைப் பரிசோதனையில் நாமகிரிப்பேட்டை வட்டார உதவி வேளாண்மை அலுவலர் சு. கோவிந்தசாமி, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் ர. சந்திரசேகரன், பயிர் அறுவடை மேற்பார்வையாளர் கோவர்த்தனன் ஆகியோர் மாணவர்களுடன் கலந்து கொண்டு பயிற்சியளித்தனர்.
 இதில், நிலக்கடலை வயலில் குறிப்பிட்ட இடைவெளியில் அளவு மார்க்கம் செய்து பயிர்களின் காய்களை அறுவடை செய்து பின்னர் காய்களின் எடையை அளவிட்டு உலர் எடைக்காக அறுவடையான காய்களை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டு உலர் எடையைக் கண்காணித்து புள்ளியியல் துறைக்கு இதன் விவரங்களை அனுப்புவது போன்றவை குறித்த பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.