பரமத்தி வேலூரில் ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடைபெற்றன.
பரமத்தி வேலூர் பாவடி அருகே சுமார் 400 ஆண்டுகள் பழமையான புற்று மண்ணினால் மூலவர் எல்லையம்மன் சிலை செய்யப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சார்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக வளைகாப்பு விழாவுக்காக பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த வளையல்களை அம்மனுக்கு காணிக்கையாக வழங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பின்னர் தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை எல்லையம்மன் கோயில் விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.