நாமக்கல்

குழந்தை விற்பனை வழக்கு: 4 பேருக்கு ஆக.28 வரை காவல் நீட்டிப்பு

DIN

குழந்தை விற்பனை வழக்கில் நான்கு பேருக்கு ஆக.28-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் அமுதா. இவர், சட்ட விரோதமாக குழந்தைகளை வாங்கி விற்பனை செய்ததாக எழுந்த புகாரையடுத்து, கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி, அவர் உள்பட எட்டு பேரை ராசிபுரம் போலீஸார் கைது செய்தனர்.  அதன்பின், இவ் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணை மேற்கொண்டு, சேலம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலிய உதவியாளர் சாந்தி,  பெங்களூரு அழகுக் கலை நிபுணர் ரேகா ஆகியோரை கைது செய்தனர். அமுதாவின் கார் ஓட்டுநர் நந்தகுமார் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். 
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும், கடந்த மூன்று மாதங்களாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.  ஆகஸ்ட் 1-ஆம் தேதி அமுதா உள்பட 4 பேரும், அடுத்த ஓரிரு நாளில், மேலும் 4 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.  
சேலத்தைச் சேர்ந்த செவிலிய உதவியாளர் சாந்தி, கார் ஓட்டுநர் நந்தகுமார், இடைத்தரகர்கள் செல்வி, ரேகா ஆகியோர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.  இந்த நிலையில், நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், புதன்கிழமை பிற்பகல் 2.50 மணியளவில் நீதிபதி ஏ.பி.லதா முன்பாக நான்கு பேரும்  ஆஜர்படுத்தப்பட்டனர்.  அவர்களுக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.  இதற்கிடையே சாந்தியும், செல்வியும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்த நிலையில்,  அவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் முன்மொழிய யாரும் வராததால்,  இருவரது ஜாமீன் மனுவும் ஒரு வாரமாக காத்திருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT