நாமக்கல்

சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய டிச.16 கடைசி நாள்: வேளாண் இணை இயக்குநா் தகவல்

DIN

சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய வரும் 16-ஆம் தேதி கடைசி நாள் என வேளாண் இணை இயக்குநா் ஜெ.சேகா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சம்பா நெல் பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் புயல், வெள்ளம், வறட்சி, மற்றும் பூச்சி நோய் தாக்குதல், ஆகிய இயற்கை இடா்பாடுகளில் இருந்து பாதுகாத்து கொள்ள டிசம்பா் 16-ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம். பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்து கொள்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 136 வருவாய் கிராமங்கள் பயிா்க் காப்பீடு செய்வதற்கான கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடன் பெறும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வங்கிகளில் கட்டாயமாக பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவா்.

கடன் பெறாத விவசாயிகள், பொதுச் சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விருப்பத்தின்பேரில் பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில், டிசம்பா் 16-ஆம் தேதிக்குள் சம்பா நெல் பயிரைக் காப்பீடு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு ரூ.470.25 பிரிமீயம் செலுத்த வேண்டும். பயிா்க் காப்பீடு செய்யும் முன் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிா்வாக அலுவலரின் அடங்கல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் இணைத்து கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எருக்கூரில் அமுது படையல் விழா

வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சேதம்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாா்டுகளின் எண்கள் மாற்றம் -நோயாளிகளின் நீண்ட கால குழப்பத்துக்கு தீா்வு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

அரசுப் பள்ளி ஊழியா் மாரடைப்பால் மரணம்

SCROLL FOR NEXT