நாமக்கல்

பொத்தனூரில் மாநில அளவிலான கபாடி போட்டி: சேலம் ஏ.வி.எஸ் கல்லூரி முதலிடம்

DIN


பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரில் நகர தந்தை பி.வி.கே மறுமலர்ச்சி மன்றம் சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான பெண்களுக்கான கபாடி போட்டி நடைபெற்றது. இதில் முதலிடம் பெற்ற சேலம் ஏ.வி.எஸ்.கல்லூரி மாணவிகளுக்கு முதல் பரிசும், சுழற் கோப்பையும் வழங்கப்பட்டன.
பொத்தனூர் நகர தந்தை பி.வி.கே மறுமலர்ச்சி மன்றம் சார்பில் மாநில அளவிலான பெண்களுக்கான கபாடி போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது.
இதில் சென்னை,வேலூர்,திருச்சி,சேலம்,தஞ்சை, நாமக்கல், பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 14 அணிகள் கலந்து கொண்டன. இதில் சேலம் ஏ.வி.எஸ் பெண்கள்அணி முதல் பரிசையும், வேலூர் ஆர்.வி.கே அணி இரண்டாம் பரிசையும், சென்னை மகளிர் அணி மூன்றாம் பரிசையும், கமலம் கல்லூரி அணி நான்காம் பரிசையும் பெற்றன.
மேலும் பி.வி.கே சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரமத்தி வேலூர் காவல்துறை ஆய்வாளர் லட்சுமணகுமார் பரிசுகள் வழங்கினார். பரிசளிப்பு விழாவில் முன்னாள் மாநில கபாடி வீரர்கள் கெளரவிக்கப்பட்டு, நினைவு பரிசு வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT