நாமக்கல்

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம்

DIN

குமாரபாளையத்தை அடுத்த வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் சுதந்திரப் போராட்ட வீரர்களாகன வேலு நாச்சியாரின் 288-வது பிறந்த தினம், வீரபாண்டிய கட்டபொம்மன் 258-வது பிறந்த தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 
விடியல் ஆரம்பம் அமைப்புடன் இணைந்து நடைபெற்ற இவ் விழாவை முன்னிட்டு மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி மற்றும் நாடகப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந் நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியை எம்.கெளரி தலைமை வகித்தார்.  விடியல் ஆரம்பம் அமைப்புத் தலைவர் ஆர்.பிரகாஷ் முன்னிலை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக கோவை தாய் தமிழ் அகாதெமி தலைவர் சு.பால்ராஜ் பங்கேற்றுப் பேசினார். 
போட்டிகளில் வென்ற மாணவ,  மாணவியருக்கு குமாரபாளையம் காவல் ஆய்வாளர் ஆர்.தேவி பரிசுகள் வழங்கினார்.  வெஸ்ட்வேலி இங்கிலீஸ் சவுண்ட் அகாதெமி ஆங்கில உச்சரிப்புப் பயிற்சியாளர் ஜி.சண்முகம், தமிழாசிரியர் ஆர்.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT