நாமக்கல்

கூட்டுறவு வேளாண் சங்கத்தில் மஞ்சள் ரூ.1.25 கோடிக்கு விற்பனை

திருச்செங்கோடு  வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில்  சனிக்கிழமை நடைபெற்ற வாராந்திர ஏலத்தில் 2500 மூட்டை மஞ்சள் ரூ.1.25 கோடிக்கு விற்பனையானது. 

DIN


திருச்செங்கோடு  வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில்  சனிக்கிழமை நடைபெற்ற வாராந்திர ஏலத்தில் 2500 மூட்டை மஞ்சள் ரூ.1.25 கோடிக்கு விற்பனையானது. 
அரியலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், கடலூர், ஆத்தூர்,  கெங்கவல்லி, கூகையூர்,  கள்ளக்குறிச்சி,  பொம்மிடி,  அரூர்,  ஜேடர்பாளையம், பரமத்திவேலூர்,  நாமக்கல், மேட்டூர்,  பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து    மஞ்சள் விற்பனைக்கு வந்தது. இந்த மஞ்சளை கொள்முதல் செய்ய   ஈரோடு,  ராசிபுரம்,  நாமகிரிப்பேட்டை,  சேலம் ஆகிய ஊர்களிலிருந்து 50 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். ஏலம்  மூலம் 2500 மூட்டை மஞ்சள் ரூ.1.25 கோடிக்கு விற்பனையானது. விரலி ரகம் குவிண்டாலுக்கு ரூ.7, 142 முதல்  ரூ.8,569 வரை விற்பனையானது. கிழங்கு ரகம் ரூ.6,269 முதல் ரூ.7,152 வரையும்,  பனங்காளி ரகம் குவிண்டாலுக்கு ரூ.11,899 முதல் ரூ.13, 699 வரையும் விலை போயின.
ஏலத்தில் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. மற்ற விற்பனை நிலையங்களை விட விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு  நல்ல விலை கிடைத்ததாக கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT