நாமக்கல்

திருச்செங்கோடு வருவாய் வட்ட ஜமாபந்தி நிறைவு

DIN

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டத்தில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கடந்த 15 நாட்களாக நடைபெற்ற  ஜமாபந்தி புதன்கிழமையுடன் நிறைவு பெற்றது.   
ஜமாபந்தியில்  821 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களில் 56 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.  நிறைவு நாளான புதன்கிழமை வருவாய் கோட்டாட்சியர்  மணிராஜ் தலைமையில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 11 பேருக்கு சுமார் ஒரு லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 42 பேருக்கு  பட்டா மாறுதல் உத்தரவு மற்றும் நத்தம் பட்டா ஒருங்கிணைப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் போது திருச்செங்கோடு வட்டாட்சியர் கதிர்வேல், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜா மற்றும் கிராம வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் , கிராம  உதவியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT