நாமக்கல்

தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு

தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 

DIN

தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 
இக்கட்சியின் தலைமை உயர்மட்டக்குழுக் கூட்டம் புதன்கிழமை ராசிபுரத்தில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் ப.எழில்செல்வன் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் கி.தமிழ்வாணன் வரவேற்றார். மாநிலச் செயலர் மு.சு.இளையராஜா, மாநில பொருளாளர் அ.முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் நிறுவனர் நல்வினை செல்வன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  மக்களவைத் தேர்தலில்  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பது. நாமக்கல் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் ஏ.கே.பி.சின்ராஜ் வெற்றிக்கு பிரசாரம் மேற்கொள்ள கட்சி தேர்தல் பணிக்குழு அமைப்பது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெற்றிக்கு பாடுபட பிரசாரக் குழுவை அனுப்புவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர் பெ.அருள்மொழித்
தேவன்,  நாமக்கல் மாவட்டத் தலைவர் மங்கையர்க்கரசி, நகரச் செயலர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT