நாமக்கல்

மின்னல் பாய்ந்ததில் தீப்பற்றி எரிந்த தென்னை மரம்

DIN

பரமத்தி வேலூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தியில் வெள்ளிக்கிழமை மாலை மின்னல் பாய்ந்ததில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.  மேலும்,  நியாயவிலைக் கடையில் மின்னணு இயந்திரங்கள் பழுந்தடைந்தன.
எஸ்.வாழவந்தி  ஊராட்சிக்குள்பட்ட  சின்னக்கரசப் பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை  மாலை பலத்த மின்னல் ஏற்பட்டது.  அப்போது அங்குள்ள நியாய விலைக் கடையில் மின்னணு இயந்திரங்கள் செயலிழந்தன.  இதனால் அந்த பகுதி  பொதுமக்களுக்கு தொடர்ந்து பொருள்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல நியாய விலைக் கடையின்  அருகில் இருந்த 3 தென்னை மரங்கள் மீதும் மின்னல் பாய்ந்தது.இதில் ஒரு தென்னைமரம்  தீப்பற்றி எரிந்தது. 
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர்கூறியது:  இந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை  திடீரென பயங்கர சத்தத்துடன் இடி தாக்கியது.  அப்போது தீ பிளம்புகள் வானில் இருந்து விழுந்ததில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.  மேலும் நியாய விலைக் கடையில் இருந்த மின்னணு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டு பொதுமக்களுக்கு பொருள்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது என்றார்.
மணல் கடத்திய ஆட்டோ பறிமுதல்
பரமத்தி வேலூர், மே 17:  பரமத்தி வேலூர் அருகே உள்ள  அனிச்சம்பாளையம் காவிரியாற்றில்  இருந்து மணல் கடத்தி வந்த சரக்கு  ஆட்டோவை பரமத்தி வேலூர் போலீஸார் பறிமுதல் செய்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.
நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி வேலூர் போலீஸார் வியாழக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.  இதில் அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து அதிலிருந்து தப்பியோடிய  அனிச்சம்பாளையத்தைச் சேர்ந்த வேலுசாமி மகன் கண்ணதாசனை (40)  தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT