நாமக்கல்

நாச்சியார், ரெங்கமன்னார் கோயில் கும்பாபிஷேக விழா

நாமக்கல் நாச்சியார், ரெங்கமன்னார் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

நாமக்கல் நாச்சியார், ரெங்கமன்னார் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல்  கிரீன்பார்க் பள்ளி சாலை, சக்திநகர் பகுதியில் நாச்சியார், ரெங்கமன்னார் கோயில் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் மகாகும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையில், சங்கல்பம்,  விஷ்வக்சேன ஆராதனம்,  புண்ணியாவசனம், துவார,  தோரண, பாலிகை,  மண்டல,  கும்பபூஜை,  ஆதார சக்தி ஹோமம், தத்துவஹோமம், புர்ணாஹூதி,  மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் கடம் புறப்பாடும், 11 மணியளவில், மகா சம்புரோக்ஷனம், தளிகை, வேத, திவ்ய பிரபந்த சாத்துமுறை, பஞ்ச தரிசனம், மரியாதை செய்தல் உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னர், 
ஸ்ரீவில்லிபுத்துர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில், வினோத் பட்டர், கமலமலர்கண்ணன் பட்டர் ஆகியோர் தலைமையில் விமான கலசத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு,  நாச்சியார், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை ஆண்டாள் திருக்கல்யாணசபை தலைவர் டி.குமரேசன்,  அமுதவள்ளி, கார்த்திகேயன், காயத்ரி, நவீன்குமார், தண்டாயுதபாணி, ராஜேஸ்வரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT