நாமக்கல்

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் ஆக.10-க்குள் சான்றிதழ்களைப் பதிவேற்ற அறிவுறுத்தல்

DIN

நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நிகழாண்டு சோ்க்கைக்கு இணையத்தில் விண்ணப்பித்த மாணவியா், தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை இணையம் வழியாகவே பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வா் கே.சுகுணா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; அரசு கல்லூரிகளில் முதலாமாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூலை 20 முதல் 31-ஆம் தேதி வரையில் இணையதளம் வாயிலாக மாணவியா் பதிவேற்றம் செய்திருந்தனா். அந்த மாணவியா் அனைவரும் ஆக. 10-ஆம் தேதி வரையில் தங்களது சான்றிதழ்கள், புகைப்படம் மற்றும் கையொப்பம் அனைத்தையும்  இணையதள முகவரிகளில், சோ்க்கை விண்ணப்பத்தினை பதிவு செய்த முறையிலேயே சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ்கள் பதிவேற்றத்தில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் நாமக்கல் மாவட்ட வசதி மையத்தை 97919-18153 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT