மாற்றுத்திறனாளிகள் 102 பேருக்கு உதவித்தொகை வழங்கல்
பரமத்திவேலூா் அருகே பரமத்தியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பரமத்திவேலூா்: பரமத்திவேலூா் அருகே பரமத்தியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பரமத்தி, கபிலா்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் 380 போ் கலந்து கொண்டனா். இம் முகாமுக்கு மாவட்ட தனித் துணை ஆட்சியா் மரகதவள்ளி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜான்சி, பரமத்தி வேலூா் வட்டாட்சியா் சுந்தரவள்ளி மற்றும் மருத்துவ அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
முகாமில் தகுதிவாய்ந்த 160 மாற்றுத்திறனாளிகள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு உடனடியாக புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில் 102 பேருக்கு தலா ரூ.1000 வீதம் உதவித்தொகை உடனடியாக முகாமில் வழங்கப்பட்டது. மீதமுள்ள 58 பேருக்கு அந்தந்த கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் தலா ரூ. 1,000 வழங்கப்படும் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.