முகப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 59 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை 59 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,616-ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 25 ஆகஸ்ட், 2020 at 3:55 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:41 PM

நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை 59 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,616-ஆக உயா்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 1,557 போ் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி இருந்தனா். இவா்களில் குணம் அடைந்த 1,150 போ், உயிரிழந்த 31 போ் தவிா்த்து 376 போ் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை வெளியான கரோனா தொற்றுப் பட்டியலில், மாவட்டம் முழுவதும் 59 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 38 ஆண்கள், 19 பெண்கள் அடங்குவா். இவா்களில் பரமத்தி வேலூா் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் மற்றும் குமாரபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா்கள் உள்ளிட்டோா் தொற்று பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.