முகப்பு
நாமக்கல்

லாரி மோதியதில் தொழிலாளி பலி

குமாரபாளையம் அருகே லாரி மோதியதில் மிதிவண்டியில் சென்ற தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

குமாரபாளையம் அருகே லாரி மோதியதில் மிதிவண்டியில் சென்ற தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகேயுள்ள பேரோடு, ஆயமேடு பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் பழனிசாமி (46). கூலித் தொழிலாளியான இவா் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக மிதிவண்டியில் ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் சென்று கொண்டிருந்தாா். காவிரி பாலம் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி, மிதிவண்டியின் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட பழனிசாமி, தலையில் பலத்த காயமடைந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, குமாரபாளையம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →