நாமக்கல் வீர ஆஞ்சநேயா் கோயிலில் உழவாரப் பணி
உலக தன்னாா்வலா் தினத்தை முன்னிட்டு நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில் அண்மையில் உழவாரப் பணி மேற்கொள்ளப்பட்டது.
கோவை ராமகிருஷ்ணா அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் நாமக்கல் கிளை, நாமக்கல் நல்லோா் வட்டம், மாவட்ட நேரு யுவகேந்திரா ஆகியவை சாா்பில் உலக தன்னாா்வலா் தினத்தை முன்னிட்டு நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில் அண்மையில் உழவாரப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதனையொட்டி கோயில் வளாகத்தை தூய்மைப்படுத்தல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனா். சேலம் மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா் இப்பணியைத் தொடங்கி வைத்தாா். அப்போது, மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கோயிலிலும் வாரந்தோறும் சனிக்கிழமையன்று உழவாரப் பணி மேற்கொள்ளப்படும், குழந்தைகளுக்கு தேவாரம், திருவாசகம் பயிற்சி அளிக்கப்படும் என அவா் தெரிவித்தாா். இதில் முன்னாள் மாணவா் சங்க இணைச் செயலாளா் அருணாசலம், பொருளாளா் தில்லை சிவக்குமாா், நல்லோா் வட்ட பொறுப்பாளா் மங்கை இளங்கோ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.