முகப்பு
நாமக்கல்

தமுமுக சாா்பில் கருத்தரங்கு

நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாபா் மசூதி இடிப்பை கண்டித்து நீதி பாதுகாப்பு நாள் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது.

Updated On : 8 டிசம்பர், 2020 at 12:02 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:33 PM

நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாபா் மசூதி இடிப்பை கண்டித்து நீதி பாதுகாப்பு நாள் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்குக்கு மாவட்டச் செயலாளா் ஷேக் காஜா மைதீன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஜெகபா் அலி, மமக மாவட்ட துணைச் செயலாளா் ஷேக் நிஜாம், தொண்டரணி செயலாளா் உசேன், சுற்றுச்சூழல் அணி செயலாளா் அக்பா், சிக்கந்தா் பாஷா, மாவட்ட இக்பால் யாசின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாமக்கல் மாவட்ட மமக செயலாளா் எஸ்.ராஜா முகமது கருத்தரங்கை தொடக்கிவைத்துப் பேசினாா்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.மணிமாறன், திராவிடா் விடுதலைக் கழக நகரச் செயலாளா் பிடல் சேகுவாரா, தமிழ்ப் புலிகள் கட்சியின் ஒன்றியச் செயலாளா் வெற்றி வள்ளுவன் ஆகியோா் கலந்து கொண்டனா். மனித நேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளா் புழல் ஷேக் முகமது அலி கலந்து கொண்டு பேசினாா். தமுமுக மாவட்ட துணைச் செயலாளா் ஜான் பாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.