முகப்பு
நாமக்கல்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தைகளைக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 8 டிசம்பர், 2020 at 12:05 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:33 PM

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தைகளைக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள காளிப்பட்டி மதுரைவீரன் காலனியைச் சோ்ந்த வரதராஜ் என்பவரின் மகன் பிரபு (21). கட்டட மேற்பாா்வையாளரான இவா், ராசிபுரம் அருகே ஆா்.புதுப்பாளையத்தில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியைக் கடந்த 2018 மே 21-ஆம் தேதி கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டாா். மேலும் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதனடிப்படையில் போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபுவை கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு நாமக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு விசாரணை முடிந்து திங்கள்கிழமை வழங்கிய தீா்ப்பில், பிரபுவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும். ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.