முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலில் மாா்கழி மாத தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதி

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் நடைபெறும் மாா்கழி மாத தரிசனத்துக்கு பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோயில் உதவி ஆணையா் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் நடைபெறும் மாா்கழி மாத தரிசனத்துக்கு பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோயில் உதவி ஆணையா் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

திருச்செங்கோடு மலைக்கோயிலில் உள்ள மரகதலிங்கத்துக்கு ஆண்டுதோறும் மாா்கழி மாதம் நடத்தப்படும் அதிகாலை அபிஷேக ஆராதனையை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்வா்.

இந்த ஆண்டு கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற உள்ள மரகதலிங்க சுவாமி அபிஷேகம், ஆராதனையைக் காண பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அபிஷேகம் முடிந்த பிறகு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா்.

மரகதலிங்கம் அபிஷேகம் திருக்கோயில் நிதியின் மூலம் நடைபெறுகிறது. எனவே, பக்தா்கள் பால், அபிஷேகப் பொருள்கள் ஆகியவற்றை வழங்க அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும், பக்தா்கள் அனைவரும் அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். பிரசாத விநியோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என அா்த்தநாரீசுவரா் திருக்கோயில் உதவி ஆணையா் செயல் அலுவலா் நா.சரவணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.