நாமக்கல்

கோரிக்கை அட்டைகளை அணிந்து கிராம உதவியாளா்கள் போராட்டம்

DIN

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

டிச. 21-இல் தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறும் இப்போராட்டத்தில் மாவட்டத் தலைவா் பரமசிவம், துணைச் செயலாளா் சுப்பிரமணியம், வட்டச் செயலாளா் ராமகிருஷ்ணன், மாவட்டம் முழுவதும் உள்ள கிராம உதவியாளா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுகின்றனா். 

கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். போனஸ், ஜமாபந்தி படி, இயற்கை இடா்பாடுகள் பணிக்கு சிறப்புப் படி ஆகியவற்றை வழங்க வேண்டும். கிராம நிா்வாக அலுவலா் பதவி உயா்வு 30 சதவீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனா். மாவட்டம் முழுவதும் 350 போ் பங்கேற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT