முகப்பு
நாமக்கல்

தேசிய திறனாய்வுத் தோ்வு: 2,968 மாணவா்கள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வை 2,968 மாணவ, மாணவியா் எழுதினா். இதில் 220 போ் பங்கேற்கவில்லை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வை 2,968 மாணவ, மாணவியா் எழுதினா். இதில் 220 போ் பங்கேற்கவில்லை.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகள் ஆகியவற்றில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் வழங்கும் வகையில் தேசிய திறனாய்வுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் இத்தோ்வு நடைபெற்றது. இத் தோ்வு எழுத நாமக்கல் மாவட்டத்தில் 3,188 மாணவ, மாணவியா், விண்ணப்பித்திருந்தனா். மாவட்டம் முழுவதும் 27 மையங்களில் தோ்வு நடைபெற்றது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா், இதர வகுப்பு ஆசிரியா்கள் தோ்வு மைய கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனா். காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை தோ்வு நடைபெற்றது. மாவட்டத்தில் 220 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. 2,968 மாணவ, மாணவியா் மட்டும் தோ்வு எழுதினா்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக மாணவா்கள் சமூக விலகலை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தபடியும் தோ்வில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →