நாமக்கல்

முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பொங்கல் விழா

DIN

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கல்வித் துறை சாா்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகளிலும், தொழில்நிறுவனங்களிலும் பொங்கல் வைத்து சூரிய வழிபாட்டை மேற்கொள்கின்றனா்.

அந்த வகையில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதில், சா்க்கரை பொங்கல் வைக்கப்பட்டு சூரியனுக்கு படையலிடப்பட்டது. பின்னா், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பொங்கல் விநியோகிக்கப்பட்டது. இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.உஷா, மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா். அனைவரும் புத்தாண்டை அணிந்து வந்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT