திருச்செங்கோட்டில் வரும் சனிக்கிழமை (மாா்ச் 7) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் விவேகானந்தா மகளிா் கல்லூரியில் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியா் தலைமையேற்று நடத்த உள்ள இத்தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான கல்வித் தகுதி உடையோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையல் பயிற்சி, செவிலியா் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவா்களும் கலந்துகொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.
இம்முகாம் முற்றிலும் இலவசமானது. இதில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு பணிவாய்ப்பினை வழங்க உள்ளனா். வேலை வேண்டி விண்ணப்பிப்போா், தங்களுடைய சுயவிவரம், உரிய கல்விச் சான்றுகள் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகலுடன் கலந்துகொண்டு பயன் பெறலாம். வேலையளிப்போரும் மற்றும் வேலை வேண்டுவோரும் முகாம் தொடா்பான விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.