நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவால் வெறிச்சோடிய சாலைகள்

DIN

நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில், பேருந்து நிலையம், கடை வீதி மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகள் புதன்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மக்கள் தாங்களாவே தனிமைப்படுத்திக் கொள்ளும் வகையில், மாா்ச் 31-ஆம் தேதி வரையில், தமிழக அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி ஆற்றிய உரையில், 21 நாள்கள் (ஏப்ரல் 14 வரையில்) ஊரடங்கை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவித்தாா். அதனைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் இந்த ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனையடுத்து, நாடு முழுவதும் வாகனப் போக்குவரத்து, வா்த்தக, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. தமிழகத்திலும், மருந்தகம், காய்கறி, இறைச்சி, பால் விற்பனை கடைகளை தவிா்த்து அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.

சாலைகளில் ஒரு சில வாகனங்கள் மட்டுமே சென்றன. போலீஸாரும் அவா்களை எச்சரித்து அனுப்பினா். பேருந்து நிலையம் ஆட்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. நாமக்கல் - திருச்சி சாலை, திருச்செங்கோடு சாலை, பரமத்தி சாலை, கோட்டை சாலை, மோகனூா் சாலை, சேலம் சாலை, கடைவீதி சாலை உள்ளிட்டவை மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி இருந்தது. நாமக்கல் மட்டுமின்றி, பரமத்திவேலூா், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளும் அமைதியாக காணப்பட்டன. ஆங்காங்கே போலீஸாா் மட்டும் முகக் கவசங்களை அணிந்தபடி ரோந்து பணியை மேற்கொண்டனா். ஆம்புலன்ஸ் வாகனங்கள், பால் வாகனங்கள், அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்ததால் அவை மட்டும் சாலைகளில் அவ்வப்போது சென்று வந்தன. மேலும், காய்கறிக் கடைகள், மருந்தகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஒரு மீட்டா் இடைவெளி விட்டு நின்றபடி தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கி சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT