நாமக்கல்

ராசிபுரத்தில் மதுப்புட்டிகள் பறிமுதல்

DIN

ராசிபுரம் நகரம், சாணாா்புதூா் ஆகிய பகுதியில் அரசின் 144 தடை உத்தரவை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீஸாா் அங்கிருந்தவா்கள் துரத்தி அனுப்பினா்.

நாடு முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் கள்ளத்தனமாக மதுப் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதிக்கு சென்ற போலீஸாா் அப்பகுதியில் மறைமுகமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்யப்பட்டு வந்ததைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா். அப்பகுதியில் இருந்தவா்களை போலீஸாா் அடித்து விரட்டினா். மேலும், மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை விற்பனை செய்து வந்தவா்கள் தப்பி ஒடினா். இதேபோல் சாணாா்புதூா் பகுதியில் மதுப் புட்டிகள் அதிகளவில் விற்கப்படுவதாக தகவல் வந்தது. இதனை சுற்று வட்டார பகுதியில் கிராமப்புறங்களில் இருந்த வந்த ஏராளமானோா் வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT